காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கும் ஆணையத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் அன்புமணி வேண்டுகோள்..!

Published by
Dinasuvadu desk

 

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே சிக்கலைத் தீர்க்க முடியும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி  வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை உச்ச நீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. வரைவுத் திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றால் பயனில்லை.

மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்படும்; காவிரி நீர் பகிர்வு குறித்த சிக்கலில் ஆணையத்தின் முடிவே இறுதியானது; மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூருவுக்குப் பதிலாக டெல்லியில் அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் மத்திய அரசு தானாக முன்வந்து செய்தவை அல்ல. மாறாக, உச்ச நீதிமன்ற ஆணைப்படி செய்யப்பட்ட திருத்தங்கள்தான் இவை. இவற்றில் காவிரி ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கர்நாடகத்தில் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தால், ஆணையத்தில் பணியாற்றும் வல்லுநர்களும், அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கும். இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மற்ற இரு திருத்தங்களும் தமிழகத்திற்கு சாதகமானவை போன்று தோன்றினாலும் அது உண்மையல்ல. புதிய அமைப்பு எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. அவற்றுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியமாகும். காவிரி அமைப்புக்கு ஆணையம் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது? என்பதுதான் கேள்வி.

காவிரி பிரச்சினையில் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், காவிரி ஆணையத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும், அதனைச் செயல்படுத்தும் அதிகாரம் இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? அத்தகைய சூழலில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

உதாரணமாக, அடுத்த மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கர்நாடகம் சுமார் 134 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 மாதங்களில் கர்நாடக அணைகளில் ஒட்டுமொத்தமாகவே 200 டிஎம்சிதான் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில் தமிழகத்திற்கு 80 டிஎம்சி அல்லது 100 டிஎம்சி வழங்க வேண்டும் என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு தான் உண்டு என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.

அவ்வாறு ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் போது அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் எதார்த்தம். கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இந்த ஆணையத்தின் முடிவை மதிக்குமா?

அதே நேரத்தில் காவிரி ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் இருந்தால், இந்த முடிவை ஆணையமே செயல்படுத்தும். அப்போது தமிழகத்திற்கு நியாயமான அளவில் தண்ணீரும் கிடைக்கும். இத்தகைய தீர்வைத் தான் தமிழக மக்களும், விவசாயிகளும் கோருகிறார்கள். காவிரி நடுவர் மன்றமும் இதே தீர்வைத் தான் வழங்கியது. ஆனால், மத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.

இப்படி எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கிவிட்டு, அதற்கு பெயரை மட்டும் கவர்ச்சிகரமாக சூட்டினால் என்ன பயன்? புதிய அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் சூட்டினால் மட்டும் காவிரி நீர் வந்து விடாது.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை விட மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் இனி எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது காவிரி நடுவர் மன்றம் அறிவித்தது போன்ற அனைத்து அதிகாரங்களுடன் கூடிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். காவிரி நடுவர் மன்றம் அறிவுறுத்தியவாறு திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதுகுறித்து வாதிட அனுமதி மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

எனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்குக் குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்ச நீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

Recent Posts

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்! 

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

1 hour ago

ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…

1 hour ago

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…

2 hours ago

விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…

2 hours ago

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

2 hours ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

3 hours ago