காவிரி வழக்கு ..!மத்திய அரசுக்கு தொடரும் சிக்கல் …!அதிரடி உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்றம் …!

Published by
Venu

உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்திற்குள் காவிரி நீர் பங்கீட்டிற்கான ஸ்கீமை செயல்படுத்துமாறு, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், 6 வார கால அவகாசம் முடிந்த பின்னர், தீர்ப்பில் கூறியுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலேயே காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்ப்பை இணைத்தே, தாங்கள் தீர்ப்பு வழங்கியதாகவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

மேலும் நதி நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவிட்ட பிறகு, நீதிமன்றம் அனைத்தையும் கண்காணித்து கொண்டிருக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வதில் இருந்து, மத்திய அரசு தப்பிக்க முடியாது என்றும், தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தை குறித்து தற்போது எதையும் கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம், ஆண்டுதோறும் தமிழகத்திற்கான காவிரி நீரை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதேநேரத்தில், தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்துவது கடமை என்றும், அதுவரை தமிழக, கர்நாடக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கடைசி நேரத்தில் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

33 mins ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

1 hour ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

3 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

3 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

4 hours ago