மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது என்றும் ஆனால் அதற்கான பணிகள் முடிவடைய கூடுதல் காலம் ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 16ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , தீாப்பு வெளியான 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கிட்டத்தட்ட 5 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளைக் கூட மத்திய அரசு எடுக்கவில்லை என தமிழக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் , காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது என்றும். ஆனால் அதற்கான பணிகள் முடிவடைய கூடுதல் காலம் ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…