காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தவறான நிலைப்பாடுடன் உள்ளது…!
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தவறான நிலைப்பாடுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே படகிலிருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் செல்வவிநாயகத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஓ.எஸ். மணியன், கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.