தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகமெங்கும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். திமுக சார்பில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் வெள்ளையன், ஏப்ரல் 11ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் போராட்டம் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதாக கூறினார். ஆனால் அவரது பயணம் தற்போது கேள்விக்குறியாக உள்ளதால், நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வெள்ளையன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…