ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி விரைந்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும், விவசாய, வணிக அமைப்புக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. உண்ணாவிரதம், கறுப்புக் கொடி, முழு அடைப்பு, ரயில், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளள.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஞாயிறன்று தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அப்போது கேட்டறிந்ததாகக் கூறப்படும் நிலையில் இரவு 7.10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்கும் நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…