காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக-வினர் திடீர் போராட்டம்…!

Published by
Venu

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் மற்றும் எதிர் கட்சியினர்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சற்று முன்  வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது.

காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.

இதற்கு முன் , திமுக செயற்குழு தீர்மானம் காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத்  நிறைவேற்றியுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரிச் சிக்கலில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்துத் தேசியப் பசுமைத்தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தவும், நேர்மையற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தலை ரத்து செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்ததற்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி பிரச்னையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது .காவிரி நீருக்காக டெல்டா மாவட்டத்தில் உரிமை மீட்பு பயணம் நடத்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும் என்றும்  சென்னை வரும் பிரதமர், மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும். வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது . முழு அடைப்பு போராட்டத்துக்கு, அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்டாலின் பேசிய பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,வி.சி.தலைவர் திருமா இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன்,தி.க. கி. வீரமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

29 minutes ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

48 minutes ago

“இந்திய அணியின் ராணி” ஸ்மிருதி மந்தனா படைத்த புது சாதனை!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?

டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…

4 hours ago

“வாய் இருக்குனு ஏதேதோ பேச கூடாது”…சீமான் பேச்சுக்கு பிரேமலதா கண்டனம்!

சென்னை :  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

4 hours ago