தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பிரதமர் மோடி வீட்டு முன்பாக தூக்குப் போடும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
நஞ்சில்லா உணவு, மரபணு மாற்ற விதைகளை தடை செய்தல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 100 நாள் விழிப்புணர்வு நடைபயணத்தை அய்யாகண்ணு மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மதுரைக்கு வந்த அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து மனு அளித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
இதற்குப் பிறகும் மத்திய அரசு செவிசாய்க்க மறுத்தால், பிரதமர் வீட்டு முன்பாக தமிழக விவசாயிகள் தூக்குப்போடும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…