காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழக பிரதிநிதியாக எஸ்.கே.பிரபாகர்,உறுப்பினராக ஆர்.செந்தில்குமார் பெயர் பரிந்துரை !
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நேற்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சக அனுமதியை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அமைச்சர் நிதின் கட்கரி. ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு என தகவல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 18-ஆம் தேதி அன்று தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே காவிரி வரைவு செயல் திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்த, மத்திய அமைச்சரவையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.