காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தருவோம்!மின்துறை அமைச்சர் தங்கமணி
மின்துறை அமைச்சர் தங்கமணி,கர்நாடகாவில் எந்த அரசு அமைந்தாலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தருவோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, சர்க்கரை ஆலைக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.