ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் நடைபெற்ற மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரி உரிமை மீட்பு போராட்ட வெற்றி விழா விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது .இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, செல்வகுமார் சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த விழாவில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
தமிழகத்தை ஏழைகள் இல்லாத தமிழகமாக உருவாக்குவேன் என சட்டமன்றத்தில் கூறினார் . தனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் சட்டமன்றத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.காவிரி மேலாண்மை பிரச்சினையில் மக்களை ஏமாற்ற தி.மு.க. பல நாடகங்களை நடத்தி வருகிறது அனால் அது பொதுமக்களிடம் செல்லாது.
தமிழர்களின் ஜீவாதார உரிமைகளை மீட்டுத்தரும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் சிறப்புடன் வாழ திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். இந்த கோட்டையை எவராலும் கிட்ட நெருங்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…