காவல் துறை  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம்!சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

சென்னை உயர்நீதிமன்றம்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2015ல் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி  மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 9 மாதங்களாகியும் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.

பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்ற உத்தரவு உள்ளதால், தேர்வானவர்கள் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால் மன உளைச்சலில் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 222 விடைத்தாள்களின் ஆய்வு அறிக்கையை சமர்பிக்க அவகாசம் கேட்டதையடுத்து 2 மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்