காவலரை ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் தாக்கியவர் கைது!
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் சென்னையில் காவலரைத் தாக்கியவரைத் திருவல்லிக்கேணிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது காவலரைப் போராட்டக்காரர் ஒருவர் கடுமையாகத் தாக்கும் காட்சி வெளியானது.
காவலரைத் தாக்கியதாகக் கூறப்படும் எண்ணூரைச் சேர்ந்த மதன் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். மதன் மீது 4வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் ஒரு வழக்கில் மட்டுமே முன்ஜாமீன் பெற்றிருப்பதால் மற்ற வழக்குகளில் அவரை இன்று திருவல்லிக்கேணிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.