காலியாகும் கமல் கூடாரம் ! பாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்
மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.
கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்தார்.பின் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்றும் அறிவித்தார் .மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாராளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி திரு. ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி திரு. ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி திரு. ரவி ஆகியோர் இன்று (05/11/2019) என்னை நேரில் சந்தித்து தங்களை (1) pic.twitter.com/gUd6E0pBuA
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) November 5, 2019
இந்நிலையில் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 3 பேர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.ரவி சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டவர்,ராஜேந்திரன் – அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டவர், ஸ்ரீகாருண்யா – கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.ர்