காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி மனு….!சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி மனு
காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காலா 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ்.
இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தத் திரைப்படம் ஜூன் 7, 2018 அன்று வெளியானது.
பின்னர் வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் ஆகும்.
இந்நிலையில் காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நடிகர் ரஜினி நடித்த காலா திரைப்படத்தை நீதிபதிகள் பார்க்க ஏற்பாடு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தங்களை போன்ற நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்துகொள்ள காலா படத்தை பார்க்க கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.