காலா படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்தர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கில் காலா படத்தில் திரவியம் நாடார், நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தவறான கருத்துகளை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுரேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.
இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட்வர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் தான் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு பல தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தொடர் சர்சையால் காலா படத்தின் வெளியீடு என்னவாகும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…