ரஜினியின் காலா பட முதல் காட்சி மதுரையில் டிக்கெட் விற்பனையாகாதது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், நள்ளிரவில் விநியோகஸ்தர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை எஸ்.கே பிலிம்ஸ் விநியோகஸ்தர் செல்வராஜிடம், அஜித், விக்னேஷ் ஆகிய ரஜினி ரசிகர்கள் காலா முதல் காட்சிக்கான 500 டிக்கெட்டை, மொத்தமாக 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால், டிக்கெட் விற்பனையாகாத நிலையில், விநியோகஸ்தர் செல்வராஜிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால், அவர் தர மறுக்கவே, நள்ளிரவில் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விநியோகஸ்தர் செல்வராஜை போலீஸார் இரவே மீட்டனர்.
மேலும், அவரை கடத்திச் சென்ற அஜித், விக்னேஷ், ராஜேஷ் , குமரகுரு, சரவணபவ , பிரபு ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் தங்கியிருந்த விடுதியில் சோதனை செய்ததில் 4.50 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை போலீஸார் சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…