காலா படத்தின் டிக்கெட் கிடைக்காததால் காலா பட விநியோகஸ்தர் கடத்தல்!போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை!

Default Image

ரஜினியின் காலா பட முதல் காட்சி மதுரையில் டிக்கெட் விற்பனையாகாதது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், நள்ளிரவில் விநியோகஸ்தர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை எஸ்.கே பிலிம்ஸ் விநியோகஸ்தர் செல்வராஜிடம், அஜித், விக்னேஷ் ஆகிய ரஜினி ரசிகர்கள் காலா முதல் காட்சிக்கான 500 டிக்கெட்டை, மொத்தமாக 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால், டிக்கெட் விற்பனையாகாத நிலையில்,  விநியோகஸ்தர் செல்வராஜிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால், அவர் தர மறுக்கவே,  நள்ளிரவில் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விநியோகஸ்தர் செல்வராஜை போலீஸார் இரவே மீட்டனர்.

மேலும், அவரை கடத்திச் சென்ற அஜித், விக்னேஷ், ராஜேஷ் , குமரகுரு, சரவணபவ , பிரபு ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் தங்கியிருந்த விடுதியில் சோதனை செய்ததில் 4.50 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக  மதுரை போலீஸார் சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்