காலா திரைப்படத்தை வெளியிட அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை!மக்கள் வேண்டாம் என நினைத்தால் காலா படம் வேண்டாம்!கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அதிரடி
திரைப்படத்தை வெளியிட அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை, மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை பற்றி பரிசீலித்து வருகிறேன். கன்னட திரைப்பட வர்த்தகசபை காலா படத்தை வெளியிடக்கூடாது என மனு அளித்துள்ளது. காலா கர்நாடகாவில் வெளியாக கன்னட மக்களுக்கு விருப்பமில்லை என மனுவில் கூறியுள்ளனர் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது. இதையடுத்து ஜூன் 7ம் தேதி காலா படம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த மே 29 ஆம் தேதி, கர்நாடகாவில் காலா படம் வெளியிடுவதற்கு அம்மாநில வர்த்தகச் சபை தடைவிதித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.