காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை!காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்!நடிகர் ரஜினிகாந்த்

Published by
Venu

காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார்.

காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும்  உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது.காலாவை படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார் .

 

முன்னதாக  கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கருத்து:

படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.மாநிலத்தின் அமைதிக்காக காலாவை திரையிடாமல் இருப்பது தான் நல்லது என்றும் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காலாவை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய உயர்நீதிமன்ற உத்தரவு நகல் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல்:

முன்னதாக கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த்:

இதேபோல் கர்நாடகாவில் ‘காலா’ திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு நிபந்தனை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

31 mins ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

52 mins ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

2 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

3 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

4 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

4 hours ago