கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Default Image

சென்னை உயர்நீதிமன்றம்  கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ பிறப்பித்த ‘லுக்அவுட்’ நோட்டீசுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஆஜராகவில்லை எனக்கூறி தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அவருக்கு எதிராக இரண்டு ‘லுக்அவுட்’ நோட்டீசுகளை சிபிஐ பிறப்பித்தது.கார்த்தி சிதம்பரம் இந்த நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வ இறுதி வாதங்கள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.தேதி குறிப்பிடாமல் இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பைத்  நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்