ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.தேர்வில் காப்பியடித்ததற்காக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சபீர் கரீம் இவர் 2015 -ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்று அவருக்கு ஐபிஎஸ் பயிற்சி அளிக்கப்பட்டு நாங்குநேரியில் கூடுதல் கண்காணிப்பாளராக கடந்த 2017 – ம் ஆண்டு பதவியேற்றார்.
மீண்டும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக இரண்டாம் கட்ட தேர்வை சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி பள்ளியில் எழுதியுள்ளார். அப்போது அவர் தேர்வில் முறைகேடு செய்ததை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கண்டுபிடித்தனர்.
சபீர் கரீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் முதலில் அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அவருக்கு உதவிய அவரது மனைவி, சபீர் கரீமின் நண்பர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கை கடந்த 10 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.மத்திய உள்துறை அமைச்சகம் , யுபிஎஸ்சி தேர்வாணைய குழுவினர் ஆகியோரின் நேரடி விசாரணைக்குப் பின் சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…