காந்தியை கொன்ற கோட்சேவுக்கு விடுதலை..!! 7 பேருக்கு…??

Default Image

மாகத்மா காந்தியை கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டு சிறை தண்டனை முடிந்த நிலையில் அன்றைய மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசு விடுதலை செய்தது.என்ற நிகழ்வை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நினைவுப்படுத்தி கொள்வாரா..?

காந்தியை துப்பாக்கியால் சூட்ட நதுராம் கோட்சேவுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்படுபவர் கோபால் கோட்சே என்பது குறிப்பிடத்தக்கது

வழக்கும்,தண்டனையும் பயணித்த பாதை…!

 

முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உச்சநீதிமன்றம் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின்பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று குடியரசுத் தலைவரால்  மறுக்கப்பட்டன.

Related image

இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை  நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டுள்ளது . இந்தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தின.ஆகஸ்ட் 30 ,2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது.

Related image

இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக்  குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.

Related image

மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

17 வருட சிறைவாசம் செய்ய கோட்சேவை விடுதலை செய்தது மகாரஷ்டிரா காங்கிரஸ். அம்மாநிலத்தில் பிறந்த தமிழக ஆளுநர் இந்த வழக்கை சிந்தித்து சட்டப்பிரிவு 161ன் படி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வாரா..?என்று பொதுமக்கள் மனதில் கேள்வி எழுகின்றன.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்