ஈரோடு மாவட்டம் ஆனந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், மகனும் உள்ளனர். சுரேஷ்க்கும் அப்பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மனைவி ஜோதிக்கும் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு பேரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர்.ஜோதியுடன் சுரேஷ்க்கு உள்ள தொடர்பு குறித்து சிலர் மாரியம்மாளுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாரியம்மாள் சுரேசை கண்டித்து உள்ளார். இருப்பினும் ஜோதியை சந்திப்பதை சுரேஷ் கைவிடவில்லை. இதனால் மாரியம்மாளுக்கும் சுரேஷ்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சுரேசிடம் கோபித்துக்கொண்டு பூதப்பாடி அருகே அலங்காரியூரில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு மாரியம்மாள் சென்றுவிட்டார்.மனைவி இல்லாததால் தனக்கு தன்னை கேட்க ஆளில்லை என்றதும், சுரேஷ் அடிக்கடி ஜோதியை தனிமையில் சந்தித்துள்ளார். ஜோதி திடீர் திடீரென வெளியே போவது, வருவது என இருந்துள்ளார். இதனை சந்தேகப்பட்ட ஜோதியின் கணவர் சின்னச்சாமி ஜோதியை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ஜோதியின் கூடாநட்பு விவகாரம் சின்னச்சாமிக்கும் தெரியவந்தது.வீட்டுக்கு வந்த ஜோதியை கண்டித்த சின்னசாமி, இனி சுரேஷை சந்திக்கக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் சுரேசுடன் உள்ள தொடர்பை விட ஜோதி மறுத்து உள்ளார். இதன்காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில நாட்கள் சின்னச்சாமியும் வேலைக்கு வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாம் இருந்துள்ளார்.
சின்னச்சாமி வீட்டிலேயே இருந்ததால் ஜோதியால் சுரேஷை சந்திக்க முடியவில்லை. சமீபத்தில் சின்னச்சாமி வீட்டில் இல்லாத நேரத்தில் வெளியே சென்ற ஜோதி, சுரேஷை சந்தித்து, வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை கூறியுள்ளார். மேலும் தன்னால் சின்னச்சாமியுடன் வாழ முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல சுரேஷை சந்திப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அத்தாணி அருகே உள்ள வரதன் தோட்டம் என்ற பகுதிக்கு ஜோதி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ், ஜோதியுடன் பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்தில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…