வீட்டின் பூட்டை உடைத்து காஞ்சிபுரத்தில் 2 லட்சம் ரொக்கம் , 10 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்திரா நகரைச் சேர்ந்த பிரதீஷ் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் வெளியூர் சென்றதை அறிந்த மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 2 லட்சம் ரொக்கம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள 10 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளிப் பொருட்களை அள்ளிச்சென்றனர்.
இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.