காங்கிரஸ் கட்சி இரண்டு அணியாக உடைக்கிறதா…? சென்னையில் அடிதடி..!!
சென்னை ,
தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான பணிகளில் காட்சிகள் தீவிரமாக செயல்பாட்டுக்கு கொண்டு இருக்கின்றனர்.இந்நிலையில் தேர்தல் பணியை சிறப்பாக முன்னெடுக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நியமிக்கப்படட அகில இந்திய மேலிட பார்வையாளரான சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் கட்சியின் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தில், அவர் பல்வேறு அணி சார்ந்த தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினரை வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றி சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான செல்வம் என்பவர் தாக்கப்பட்டுள்ளார்.இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட்து, இந்த நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது…
ஒரு தேசிய கட்சி ,தமிழகத்தில் எல்லோராலும் போற்றக்கூடிய ஆட்சியை கொடுத்த கட்சி இரண்டு அணியாக அடித்துக் கொண்டது வேதனையின் உச்சமாக அரசியல் கட்சி தலைவர்கள் பார்க்கின்றனர்..
DINASUVADU