உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர் என்று பன்முகங்கள் கொண்டவர் வைரமுத்து. இவர் தேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசித்து வந்தாலும் அடிக்கடி சொந்த ஊர் செல்வது வைரமுத்துவின் வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை சென்ற வைரமுத்து பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.