கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் தீடிர் அனுமதி…!!

Default Image
 உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தமிழ்த் திரைப்பாடலாசிரியர், கவிஞர், நாவலாசிரியர் என்று பன்முகங்கள் கொண்டவர் வைரமுத்து. இவர் தேனி மாவட்டம், மெட்டூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் வசித்து வந்தாலும் அடிக்கடி சொந்த ஊர் செல்வது வைரமுத்துவின் வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை சென்ற வைரமுத்து பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
நேற்று இரவு உணவு உட்கொண்டபோது வைரமுத்துவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அண்ணா நகரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை அடுத்து தற்போது வைரமுத்துவின் உடல்நலம் தேறி வருவதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
வைரமுத்து டிஜ்சார்ஜ் ஆனவுடன் வடுகபட்டிக்குத் திரும்புவாரா அல்லது சென்னைக்கு புறப்படுவாரா என்று தெரியவில்லை.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்