கள ஆய்வினை அடிப்படையாகக்கொண்டு திமுக நிர்வாகிகள் மாற்றம் நடவடிக்கை!
மாவட்ட வாரியாக நடைபெற்ற கள ஆய்வுப் பணிகளின் அடிப்படையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மாற்றப்பட்டு சிலர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்த ஸ்டாலின், கட்சியை பலப்படுத்துவது குறித்து அவர்களிடம் குறை, நிறைகளை கேட்டறிந்தார். அந்த கள ஆய்வுப் பணிகளின் அடிப்படையில் 10 மாவட்டங்களின் நிர்வாகிகள் மாற்றம் குறித்த அதிரடி அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் அன்பகழகன் வெளியிட்டுள்ளார்.
கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தமிழ்மணி விடுவிக்கப்பட்டு, தென்றல் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவனுக்குப் பதிலாக காந்திசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பல மாவட்டங்களில் ஒன்றியம் மற்றும் பகுதிச் செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள 55 மாவட்டங்களிலும், நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.