கள்ள காதலின் மகளையும் விட்டு வைக்காத கொடூரன் போஸ்கோ சட்டத்தில் கைது…!
ஆவடி அருகே, கள்ளக்காதலியின் மகளை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் இன்பநேசன்(வயது 33). இவர் தச்சு வேலை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவிக்கு குழந்தைகள் கிடையாது. இன்பநேசனுக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அந்த பெண்ணுக்கு, முதல் கணவர் மூலம் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இன்பநேசன் அவரது மனைவியை விட்டு விட்டு இந்த பெண் மற்றும் அவரது பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அந்த சிறுமியை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.
அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைகேட்டு சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு யார் காரணம்? என சிறுமியிடம் உறவினர்கள் விசாரித்தனர்.
அப்போது அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது இன்பநேசன்தான் தன்னை கற்பழித்ததாக கூறினார். அப்போது இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் அந்த சிறுமி தெரிவித்தார். ஆவடி,
பின்னர் இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்னை வேளச்சேரி பகுதியில் இருந்த இன்பநேசனை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தார்.அப்போது நடத்திய விசாரணையில் ,
இன்பநேசன் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதுடன், தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது தாய் உள்பட யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.தற்போது சிறுமி இன்பநேசனால் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரியவந்ததையடுத்து இன்பநேசன் மீது காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரை நேற்று மாலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…
கள்ளக்காதலன் தாய் மற்றும் குழந்தையின் வாழ்க்கையில் விளையாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது…
DINASUVADU