கல்வி உதவித்தொகை உயர்வு கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் போராட்டம்!
கல்வி உதவித்தொகை உயர்வு கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் கருப்புப்பட்டை அணிந்து மருத்துவமனை டீன் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தினர்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவில் கல்வி உதவித்தொகை வழங்குவதால் படிப்பதற்கு போதியளவு புத்தகங்கள் வாங்க முடியவில்லை, என்றும் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சி கருத்தரங்கு போன்றவற்றிற்க்கும் சிறப்பாக செயல்பட முடியாத சூழல் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையைச் சேர்ந்த அமைச்சர், முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து ஆறு மாதமாகியும் நடவடிக்கை இல்லை எனக் கூறிய அவர்கள், இன்று முதல் கருப்புப் பட்டையணிந்து பணிக்கு செல்வதாகவும், அரசு செவி சாய்க்காவிட்டால் 21ஆம் தேதி மனித சங்கிலியும், அதன் பின் 25-ம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.