கல்வியாளர்கள் மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்ததற்கு எதிர்ப்பு!

Default Image

தமிழக அரசு சார்பில்  மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை மாணவர்களின் சுமையை அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் ஒன், பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடங்களில் உள்ள 2 தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது  தமிழக அரசின் மொழிப்பாட இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை தி.நகரில் கல்வியாளர்களின் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இரண்டு மொழிப்பாடத்திற்கு நான்கு தாள்கள் வீதம் ஏறத்தாழ பத்து நாட்கள் செலவிடப்படுவதாலும், மாணவர்களின் தேர்வு சுமையை குறைக்கவுமே தாள்கள் இணைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின் போது கல்வியாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்த அரசு, தற்போது யாருடைய கருத்துகளையும் கேட்காமல், தாமாக செயல்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மாணவர்களின் நலன் கருதி ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் மற்றும் வட மாநிலங்களை போன்றே மொழிபாடங்களுக்கு ஒரே தாள் என மாற்றம் செய்துள்ளதாக தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் மொழிசார்ந்த உணர்வுகளில் மற்ற மாநிலங்களை விட தனித்து நிற்பதாகவும், தமிழகத்தின் அடையாளமே அதன் மொழியால் தான் என குறிப்பிடும்  கல்வியாளர்கள் மொழிப்பாட தாள்களை குறைப்பது மாணவர்களின் அறநெறி சிந்தனையையும் குறைத்துவிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.

1978 – ஆம் ஆண்டு முதல் மொழி பாடங்களுக்கு இரண்டு தேர்வுகள் நடைபெறுவதாகவும், 40 ஆண்டுகால நடைமுறையை எந்த வித விவாதங்களுக்கும் உட்படுத்தாமல் தமிழக அரசு மாற்றியிருப்பது, மாணவர்களின் மொழி திறன், சிந்தனை வளம் மற்றும் படைபாற்றலில் பாதிப்பு ஏற்படும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்