கலையிழந்த காணும் பொங்கல்; கடற்கரைகளில் கூட தடை !
பொங்கல் விடுமுறை நாட்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ( ஜன-15- ஜன-17 ) பொதுமக்கள் கடற்கரைகளில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த தடையானது சென்னை மெரினா முதல் தமிழகத்தின் அனைத்து கடற்கரையிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடற்கரை சர்விஸ் சாலையில் வாகனங்களுக்கான அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.