போலீசார் திருப்பூரில் பச்சிளம் குழந்தையின் கண்முண்ணே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்துள்ளனர். கலாபக்காதலன் திரைப்பட பாணியில் அக்காவின் கணவர் மீதான ஆசையால் கொலைகாரியாக மாறிய தங்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் காமாட்சியம்மன் நகரை சேர்ந்த பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். கடந்த 14ஆம் தேதி பூபாலன் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரது மனைவி நதியா மட்டும் தனது கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். இரவு எட்டு மணியளவில் பூபாலனின் சகோதரர் ஜீவா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, நதியா கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட நதியா அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி திருடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. நகை மற்றும் பணத்துக்காக கொலை நடத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், நதியாவின் கணவர் பூபாலன், பூபாலன் தம்பி மணிபாலன், ஜீவானந்தம், ஆகியோரிடமும் விசாரணைமேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் எவ்வித துப்பும் கிடைக்காத, நதியாவின் சித்தி மகளான ரேகாவின் மேல் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். ரேகாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கொலை நடந்த அன்று அதிக முறை பேசியது தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜனை விசாரித்த போது, கையில் இருந்த வெட்டு காயம் குறித்து போலீசார் கேட்டு விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தபோது, ரேகாவின் தூண்டுதலின் பேரில் நதியாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.
திருமணமாகி கணவரைப் பிரிந்த ரேகாவிற்கு, மனைவியின் தங்கை என்ற முறையில் பூபாலன் பண உதவி செய்து வந்ததால் அவர் மீதும் ஆசை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பூபாலனின் சொத்துக்கள் மீது ஆசை கொண்ட ரேகா அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்துள்ளார். தனது அக்கா இறந்துவிட்டால் தாயை இழந்த குழந்தையைக் கவனிக்க தன்னைத்தான் பூபாலனுக்கு மணமுடித்து வைப்பார்கள் என்பதால் அவரை கொலை செய்துவிட திட்டம் தீட்டியதோடு, ஆண் நண்பர் நாகராஜின் மூலம் அதனை செய்தும் முடித்துவிட்டார்.
கொலை நடந்த அன்று போலிசார் விசாரிக்கையில் ரேகா ஒன்றும் தெரியாதது போல் அழுதபடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணம், பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டதன் விளைவு தற்போது ரேகாவை சிறைக்குள் தள்ளியதோடு, அக்காவையே கொலை செய்தவர் என்ற சொல்லுக்கும் ஆளாக்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…