தூத்துக்குடியில் மே22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போரட்டத்தை அடுத்து அரங்கேறிய வன்முறையை ஒடுக்குவதற்காக குவிக்கப்பட்ட காக்கிப்படை இன்னும் நகரின் தெருக்களில் நிறைந்திருக்க, பாதிக்கப்பட்ட உள்ளுர்வாசிகள் பலரும் காஷ்மீரில் இருப்பதுபோல தோன்றுகிறது என்கின்றனர்.
அண்ணா நகர், குமரரெட்டியாபுரம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வெளியியே வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் மாவட்ட நிர்வாகம் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைக்காமல் இருப்பதால், பதட்டம் இன்னும் நீடிப்பதுபோலவே தோற்றம் அளிக்கிறது என சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
காஷ்மீரில் எல்லா தெருக்களிலும் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் இருப்பதை செய்தியில் பார்த்திருக்கிறோம். அதேபோல எங்கள் ஊரில் காவல்துறையினர் குவித்திருப்பது எங்களை மீளாத அச்சத்தில் வைத்திருகிறது. காஷ்மீரில் இருப்பதுபோல உள்ளது என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.
மேலும் அண்ணா நகர் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு நடத்திவருவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறுகின்றனர்.பல இளைஞர்களை எந்தவித காரணமும் சொல்லாமல் கைது செய்துள்ளார்கள்.
மக்களின் சந்தேகங்கள்..!!
மே22ம் தேதி போராட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த எடுத்த நடைமுறைகளில் பல சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளன.
எந்த அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள். அவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி அமைதியை கொண்டுவரமுடியுமா? இந்த விதிமுறை மீறல்களை விசாரிப்பதற்கு ஆணையம் கொண்டு வந்துவிட்டார்கள். இதுவரை அரசாங்கம் அமைத்த ஆணையங்கள் அரசுக்கு சாதகமாகவே அறிக்கைகளை வெளியிட்டுள்ளன என்பதால் இந்த ஆணையம் குறித்தும் முழு சந்தேகம் உள்ளது.
சட்டத்திற்கு புறம்பான முறையில் யாரையும் கைது செய்யவில்லை.என்கின்றனர் ஆனால் வீட்டுல டிவி பாத்திட்டு இருந்த இரண்டு பசங்களையும் கூட்டிப்போய்ட்டாங்க. எங்க தெரு பூரா போலீஸ்காரங்க. எப்படிமா நாங்க நிம்மதியா இருப்போம்,”என்று என தங்களின் வேதனையை தெரிவிக்கின்றனர்.
கைது செய்த எல்லோருக்கும் வழக்கறிஞர்கள் வருகிறார்கள். நீதிபதி முன்பாக ஆஜர் செய்கிறோம். பதற்றம் நிலவும் இடங்களில் மட்டுமே காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அமைதி திரும்பினால், எல்லா இடங்களிலும் காவலர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்,” மேலும் இரவு நேரங்களில் மின்சாரத்தை நிறுத்தி கைதுகள் நடைபெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தற்போது உள்ள காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மறுத்துள்ளார்.
மேலும் இன்று 144 தடை உத்தரவு வாபஸ் பெற படுவதாக ஆட்சியர் அறிவித்தார் எத்தனை அமைதி திரும்பினாலும் அமைதியாய் தூங்கும் 13 உயிர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறது இந்த அரசாங்கம்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…