கலவரத்தில் தொடர்பில்லாதவர்களை தூத்துக்குடியில் கைது செய்யவில்லை!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி கலவரத்தில் தொடர்பில்லாதவர்களை கைது செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ள நிலையில் , பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்த 6 பேர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தில், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக 6 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கலவரத்தில் தொடர்பில்லாத யாரையும், சட்ட விரோதமாக கைது செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், ஆட்சியர் சந்தீப் நந்துாரி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.