கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்கு மீண்டும் இயக்கம்…!
தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன.
மத்திய அரசைக் கண்டித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இன்று (ஏப்ரல் 5) மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாது என்று கர்நாடக போக்குவரத்துத்துறை புதன்கிழமை அறிவித்தது.
தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முழு அடைப்பு போராட்டம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியுள்ளன. இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.