கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி உபரி நீர் திறப்பு!காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பாதுகாப்பான இடங்களுக்குச் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் செல்ல அறிவுரை வழங்கியுள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.
இது குறித்து அவர் கூறுகையில் , கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் முதல் எடப்பாடி வரை காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .அதேபோல் ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் .காவிரி கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி அவசர என் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.