கர்நாடகாவில் ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.மேலும் உச்சநீதிமன்றம் தனது தனித்தன்மை, பெருமையை காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கை பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜிவாலா:
சதி வீழ்த்தப்பட்டது, கர்நாடகாவிற்கு இது வெற்றி ,பாஜக வீழப்போவதற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது:
தேசிய கீதத்துக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பாஜகவினர் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
பாஜக எம்எல்ஏக்களும், சபாநாயகரும் தேசிய கீதம் முடிவதற்கு முன்பாகவே எழுந்து சென்றுவிட்டனர்.பாஜகவின் ஜனநாயகம் இதுதானா? உச்சநீதிமன்றம், மக்கள் ஆகியவற்றை விட பெரிய அதிகாரம் பிரதமருக்கு கிடையாது என்றும் காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மக்களின் தீர்ப்பை எந்த மாநிலத்திலும் பாஜக மதிப்பதில்லை.
எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னால் முதல்வர் சித்தராமையா கூறியது:
காங்கிரஸ் எம்எல்ஏக்களை பேரம் பேச முயற்சித்ததாக எடியூரப்பா சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டார் என்று கர்நாடக முன்னால் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…