கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைப்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், முதலமைச்சராக பதவி ஏற்ற பாஜகவின் எடியூரப்பா இன்று பெரும்பான்மை நிரூபிக்காமலே பதவி விலகினார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறியதாவது:
“ தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதேநேரத்தில், மதச்சார்பற்ற அணியாக காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி அவர்கள் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஒருங்கிணைந்து இருப்பது வரவேற்கத்தக்கது. மதச்சார்பற்ற அணிகள் இணைய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அது நிறைவேற்றப்பட்டு இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கும், திரு. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…