கருணாஸ் தொகுதிக்குள் செல்ல பயம் என்றால் என்னுடன் வரலாம்!தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் தொகுதி திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு தொகுதிப்பக்கம் செல்ல அச்சமாக இருக்கிறது என்றால், தான் கூட்டிச் செல்வதாக கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஓட்டுப்போட்டு தேர்வு செய்த மக்களுக்கு நேரில் சென்று பணி செய்ய வேண்டியது சட்டமன்ற உறுப்பினரின் கடமை என்றார். இதனை மறந்து, ரிமோட் கண்ட்ரோலில் வேலை பார்க்க கருணாஸ் நினைக்கிறார் என்றும் மணிகண்டன் தெரிவித்தார்..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.