உயிராய் நேசித்த உடன்பிறப்புகளுக்கு உதாரணமாய் இருந்து காட்டிய தலைவர்..!!

Default Image

கருணாநிதி எனும் கலங்கரை விளக்கம் எத்தனையோ சமுக படகுகளை கரையேற்றியிக்கிறது இன்னும் அவருடைய பகுத்தறிவு சிந்தனைகளும்,பெண்ணிற்கு சம உரிமை,ஆண்-பெண் அல்லாத மூன்றாம் பாலினத்தவரை இழிவு படுத்திய சமுகத்திற்கு மத்தில் திருநங்கையர்கள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கு புது இலக்கணம் வகுத்தவர் கருணாநிதி.

தனது இளம் வயதில் பள்ளியில் படிக்க சென்ற போது குறிப்பிட்ட சமுத்தினர் பள்ளிக்குள் நுழைய கூடாது என்றனர் ஆனால் கலைஞர் பள்ளியில் நுழைந்து படிப்பேன் அல்லது அருகில் உள்ள குளத்தில் இறப்பேன் என்று கூறி பள்ளிக்குள் நுழைந்து அக்காலத்திலே தன்னுடைய துணிச்சலால் சமுகத்தை சாட்டையால் அடித்தவர்.
கலைஞர் எனும் கதிரொலி 1924 ஆம் ஆண்டு ஜீன் 3 தேதி திருக்குவளையில் பிறந்த தீப்பந்தம் கருணாநிதி.தனது 14 வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் அது அவருடைய பேனாவில் இருந்து அறிந்து கொண்டது சமுகம் இவருடைய பாரசக்தி படம் இன்றளவும் பேசப்படும் படம் சமுகத்தை தனது பேனாவால் கிழித்து எரிந்துருப்பார் கலைஞர்.அவருடைய ஆதங்கம் சமுகத்தின் மீதுள்ள கோபம் எல்லாம் வசனத்தில் தெரிக்கும்.

அரசியலில் உள்ள அதே வெட்கை தமிழின் மீதும் அவருக்கு உண்டு 1947 தொடங்கிய ராஜகுமாரி முதல் 20011 வெளிவந்த பொன்னர்-சங்கர் வரை சுமார் 64 ஆண்டுகள்,கதை திரைக்கதை,வசனம்,நாடகம்,பாடல்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.எம்.ஆர் ராதா அவர்கள் வழங்கிய கலைஞர் என்ற பட்டமே இன்றளவும் எல்லோராலும் அவ்வாரே அழைக்கப்படுகிறது.
இவரை ஒரு அரசியல் தலைவராக காண்பித்தது மொழி போராட்டம் தான் அதில் கருணாநிதி மொழி  என்றால் என்னவென்று அறியாத சிலருக்கு கூறுவதை போல கூறியிப்பார் மொழி என்பது இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்கள் கட்சியின் அரசியல் கொள்கை
இந்தி என்பது உணவு விடுதியில் எடுத்து செல்லும் உணவு(எட்டுஉணவு),ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு,தமிழ் என்பது குடும்ப தேவையறிந்து,விருப்பமறிந்து,ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்படும் உணவு என தனக்கே உரிய பாணியில் விடைதந்தார் கருணாநிதி.

தான் தேர்தலில் நின்ற 13 சட்டமன்ற இடங்களில் தோற்றதேயில்லை அப்படி ஜெயித்த ஒரே தலைவர் இவர் தான் என்பதை தற்போது மெரினாவிற்கு தீர்ப்பு வந்ததிலிருந்தும் அறியாலம்.

அத்தைய மூத்த தலைவரை தழிழகம் இன்றைய நேரத்தில் இழந்துள்ளது.அவர் அதிகமாக உச்சரித்த வார்த்தைகள் அண்ணா ,உடன்பிறப்புகளே…என்பது தான்

கருணாநிதி அவர்கள் தமிழும்,தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத தலைவராக ,தமிழ் பற்றலாராக தன்னை இத்தமிழகத்தில் விட்டு செல்கிறார்..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்