எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது.அதேபோல் இன்றும் அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
சரியாக மாலை 04.30 மணிக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.அறிக்கையில் கூறியது, கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் படிப்படியாக செயலிழப்பதால் அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில் மிகவும் கவலைக்கிடம் என்று வெளியானது.
கருணாநிதி உடல்நிலையில் மிகவும் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் பலர் கதறி அழுது வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் யாருக்கும் காவேரி மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.வெளியிலிருந்து யாரும் காவேரி மருத்துவமனைக்குள் வர இனி அனுமதியில்லை என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…