கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.நேற்று மாலை அறிக்கை ஓன்று வெளியானது.அதேபோல் இன்றும் அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
சரியாக மாலை 04.30 மணிக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கையில் கூறியது, கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் படிப்படியாக செயலிழப்பதால் அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மணிநேரங்களாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி வருகிறது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின்னும் கலைஞரின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. கலைஞரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடு தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.நேற்று வெளியான அறிக்கை.
நேற்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்தது.இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில் மிகவும் கவலைக்கிடம் என்று வெளியானது.
கருணாநிதி உடல்நிலையில் மிகவும் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் பலர் கதறி அழுது வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…