கருணாநிதி மரணமடைந்தும் தீராத பிரச்சினை …!மெரினாவில் இடம் கேட்டு போராடியவர்கள் மீது தடியடி …!இதயத்தை எகிற வைக்கும் போராட்டம் …!

Default Image

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி காவேரி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தனர். இன்று 11 ஆவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை  அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று  மதியம் இதற்கு முன்பாக  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமியும் முதல்வரை நேரில் சந்தித்தனர்.நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.அதன் பின்னர் மருத்துவமனையின் கருணாநிதி காலமானார் என்று அறிக்கை சரியாக மாலை  06.40 மணிக்கு வெளியிட்டனர்.
கருணாநிதி காலமானார்  காவேரி மருத்துவமனை அறிக்கை விவரம்:
மாலை 6.10 மணிக்கு தி.மு.க தலைவர் கலைஞர் காலமானார். 95வது வயதில் தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று அறிக்கை வெளியிட்டது.  இதன் பின்னர் அவரது மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை :

இந்நிலையில் திமுகவினர் முதலமைச்சரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவிற்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
அந்த அறிக்கையில் , நாளை திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அரசு விடுமுறை. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுசரிக்கப்படும் .திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சட்டச்சிக்கல் இருப்பதால் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
 
இதனால்  சென்னை மெரினாவில் திமுக  தலைவர் கருணாநிதிக்கு  இடம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.மேலும்  வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும்” என்று  காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர்.

பின்  திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி காவேரி மருத்துவமனை முன் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை தொண்டர்கள் தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றது.திமுக தலைவர் கலைஞருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கோரி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்