கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி :திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு!
சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி உருவ படத்திற்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது காமராஜர் அரங்கில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
DINASUVADU