கருணாநிதி  நினைவேந்தல் கூட்டம்:ரஜினிகாந்த் -கமலுக்கு அழைப்பு கிடையாது…!பரம எதிரியான பாஜகவிற்கு அழைப்பு ..!பாரபட்சம்காட்டும் திமுக

Default Image

சென்னையில் நடைபெறும் கருணாநிதி  நினைவேந்தல் கூட்டத்தில் பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
Related image
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கருணாநிதி  நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.
Image result for திமுக
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தேசியத்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கூட்டத்திற்கு ரஜினி, கமல், வைகோ, திருமாவளவன் அழைக்கப்படவில்லை.இதே போன்று  திமுக அதிமுக இடையே ஜெயலலிதா மறைவுக்கு பின் சமீபகாலமாக நிலவி வந்த பண்பாடு காரணமாக கருணாநிதியை பலமுறை அதிமுக தலைவர்கள் சென்று பார்த்தனர். ஆனால் நினைவேந்தல் கூட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பில்லை.
அழைத்தால் பரிசீலிப்போம் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால் அழைக்கவே இல்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமித் ஷா கலந்துகொள்கிறார். இந்த நிகழ்வை வைத்து திமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாகவும், கூட்டணிக்கு அச்சாரம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்