கருணாநிதி நினைவேந்தல்:பாஜகவை அழைக்கும்போது அதிமுகவையும் அழைக்கலாம் …! சுப.வீரபாண்டியன்
அதிமுகவை அழைப்பு விடுக்காதது குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிட்ட பல தேசியத்தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கூட்டத்திற்கு ரஜினி, கமல், வைகோ, திருமாவளவன் அழைக்கப்படவில்லை.இதே போன்று திமுக அதிமுக இடையே ஜெயலலிதா மறைவுக்கு பின் சமீபகாலமாக நிலவி வந்த பண்பாடு காரணமாக கருணாநிதியை பலமுறை அதிமுக தலைவர்கள் சென்று பார்த்தனர். ஆனால் நினைவேந்தல் கூட்டத்தில் அதிமுக தலைவர்களுக்கும் அழைப்பில்லை.
அழைத்தால் பரிசீலிப்போம் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால் அழைக்கவே இல்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவை அழைப்பு விடுக்காதது குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்க கூட்டத்திற்கு பாஜகவை அழைக்கும்போது அதிமுகவையும் அழைத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
DINASUVADU