கருணாநிதி நினைவிடத்தில் பிரமாண்ட அளவில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் பேனா வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி(அதாவது நேற்று முன்தினம் ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயம் செல்வதற்கு முன் தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இன்று திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் பிரமாண்ட அளவில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் பேனா வைக்கப்பட்டுள்ளது.இதை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக கண்டுகளித்து வருகின்றனர்.
DINASUVADU
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…