கருணாநிதி கவலைக்கிடம்…! அறிக்கையை தொடர்ந்து மருத்துவமனை முன்பு குவியும் திமுக தொண்டர்கள்…!
திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
இன்று மாலை(ஆகஸ்ட் 6 ஆம் தேதி) காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருந்தது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதுமையால் கருணாநிதியின் உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.கருணாநிதியின் உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற செய்தியால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.